Studies in the Scriptures

Tabernacle Shadows

 The PhotoDrama of Creation

[left.htm]

 

பஸ்கா ஏற்படுத்தப்பட்டது

 

மீண்டும் மீண்டுமாக மோசேயும், ஆரோனும் பார்வோனிடத்தில், "என் ஜனங்களைப் போகவிடவேண்டும்" எனும் தேவ செய்தியுடன் சென்றார்கள். மீண்டும் மீண்டுமாக வாதைகளும், ஜனங்களைப் போகவிடுவதற்கு மறுத்ததற்குமான தண்டனையாகக் கொடுக்கப்பட்டது. வாதைகள் நிறுத்தப்பட்டால், தான் ஜனங்களைப் போகவிடுவதாக மீண்டும் மீண்டுமாக பார்வோன் அறிவித்தான். ஆனாலும் மீண்டும் மீண்டுமாக பார்வோன் தனது வார்த்தையின்படி நடந்துகொள்ளவில்லை. "மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது" (உரோமர் 9:17). இதன் அர்த்தமாவது, எகிப்தின் சிங்காசனத்தில் வேறொரு பிரபுவைக் தேவனால் கொண்டு வந்திருக்க முடியும்; அவர் இந்தக் குறிப்பிட்ட பார்வோனுக்குத் தயைப் பாராட்டினதற்குக் காரணம், அவனுடைய பொல்லாத சுயசித்தமும், பிடிவாதமும் மற்றும் சுயநலமுமாகும்.  

 

கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினதாக வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன. இதன் விளக்கம் என்னவெனில், தேவனுடைய தயவே/காருணியமே பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினது. பார்வோன் தான் சரியாய் நடந்துகொள்வான் என்று வாக்குறுதி கொடுத்தப்போதெல்லாம், உடனடியாகப் பல்வேறு வாதைகளை அப்புறப்படுத்தும் விஷயத்தில் தெய்வீகத் தயவும், பெருந்தன்மையும் வெளிப்பட்டது. இது அவனைக் கீழ்ப்படிவதற்கும், அன்புகூருவதற்கும் தூண்டுவதற்குப் பதிலாக, அவனை அதிகமாய்ப் பிடிவாதம் கொள்ளச் செய்தது. அவன் ஒவ்வொரு வாதைகளுக்குள்ளாக ஒன்றன்பின் ஒன்றாகக் கடந்து போகுகையில், பின்வரும் வாதைகள் அதிகம் பாதகமானதாய் இருக்காது என்று உறுதிக்கொண்டவனாய்க் காணப்பட்டான். அவன் எதிர்த்து நின்றதற்குத்தக்கதாக துன்பத்தை அனுபவித்தான்/தண்டிக்கப் பெற்றான் (யாத்திராகமம் 4:21; 7:3; 14:4).

 

பத்தாவது வாதை கவலைக்கிடமானதாய்க் காணப்பட்டது. எகிப்தின் முதற்பேறானவர்கள் அனைவரும் மரித்தார்கள், ஆனால் தெளிக்கப்பட்ட இரத்தத்தின் கீழ்க் காணப்பட்ட இஸ்ரயேலின் முதற்பேறானவர்கள் பாதுகாப்பாய் இருந்தார்கள். இப்படியாய் தேவன் உலகத்திலிருந்து இப்பொழுது அழைக்கப்படுகின்றதான "முதற்பேறானவர்களாகிய சபையின" அடையாளப்படுத்திக் காண்பித்துள்ளார். முதலாம் உயிர்த்தெழுதலின் வாயிலாக இவர்கள் மகிமையடைந்த பிற்பாடு, இவர்கள் இஸ்ரயேல் அனைவரையும் ஆசீர்வதிப்பதற்கும் மற்றும் இஸ்ரயேல் வாயிலாக, பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பதற்குமான "இராஜரிக ஆசாரிய கூட்டத்தினராக," ஆவிக்குரிய லேவியர்களாக இருப்பார்கள்.

 

முதற்பேறானவர்களின் சபை கடந்துபோகப்பட்டு அல்லது விசேஷமாய் இரட்சிக்கப்பட்டு, ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் திவ்விய சுபாவத்தில் பங்காளிகளாகவும், மேசியாவின் ஆளுகையின்போது பிற்பிறப்புகளை ஆசீர்வதிப்பதற்கென மேசியாவின் இராஜ்யத்தில் பங்காளிகளாகவுமாக்கப்படுகின்ற காலமாகிய, 19 நூற்றாண்டுகள் காலமான இந்தச் சுவிசேஷ யுகத்திற்கு, பஸ்கா இரவானது நிழலாய் இருக்கின்றது என்று வேதமாணவர்கள் எண்ணுகின்றனர். வீட்டுவாசல் நிலைக்கால்களில் இரத்தம் தெளிக்கப்படுவதானது, கிறிஸ்துவின் இரத்தத்தின் மீதான விசுவாசத்தை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.

 

 



எகிப்தியர்களின் முதற்பேறானவைகள் சாகுதல


பார்வோனுக்கு முன்பாக மோசே

 




இரத்தம் தெளிக்கப்படுதல்




பார்வோனுக்கு முன்பாக மோசேயும் ஆரோனும்



பஸ்கா ஆட்டை புசித்தல்

< Previous          Next>

Page: Foreword - 1 - 2 - 3 - 4 - 5 - 6 - 7 - 8 - 9 - 10  - 11 - 12 - 13 - 14 - 15 - 16 - 17 - 18 - 19 - 20 - 21 - 22 - 23 - 24 - 25  26 - 27 - 28 - 29 - 30 - 31 - 32 - 33 - 34 - 35 - 36 - 37 - 38 - 39 - 40 - 41 - 42 - 43 - 44 - 45 - 46 - 47 - 48 - 49 - 50 - 51 - 52 - 53 - 54 - 55 - 56 - 57 - 58 - 59 - 60 - 61 - 62 - 63 - 64 - 65 - 66 - 67 - 68 - 69 - 70 - 71 - 72 - 73 - 74 - 75 - 76 - 77 - 78 - 79 - 80 - 81 - 82 - 83 - 84 - 85 - 86 - 87 - 88 - 89 - 90 - 91 - 92 - 93 - 94 - 95 - 96 - 97 - 98 

Please mailto:day7000@sbcglobal.net for permission to use artwork.

Return to Tamil Home Page

Illustrated 1st Volume
in 31 Languages
 Home Page Contact Information